விஜய் நடித்த 'வாரிசு' திரைப்படத்தை தயாரித்த பிரபல தயாரிப்பாளர் ராஜு வீடு மற்றும் அலுவலகத்தில் கடந்த சில தினங்களாக வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதாக வெளியான தகவல் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இவர் தெலுங்கில் முன்னணித் தயாரிப்பாளர் மற்றும் விநியோகஸ்தர். பல தெலுங்கு முன்னணி நடிகர்களை வைத்து பிரம்மாண்டமாக அடுத்தடுத்து படங்களை தயாரித்து வருகிறார். சமீபத்தில் இவரின் தயாரிப்பில் கேம்சேஞ்சர் படம் ரிலீஸானது.
இந்நிலையில் வருமான வரித்துறை அதிகாரிகளிடம் இவர் தான் தயாரித்த வாரிசு படத்தின் உண்மையான வசூல் 120 கோடி ரூபாய்தான் என்றும் அந்த படத்துக்காக விஜய்க்கு 40 கோடி ரூபாய் மட்டுமே சம்பளம் கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் வாரிசு படம் ரிலீஸான போது அந்த படம் திரையரங்கு மூலமாகவே 300 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்ததாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.