பாஜக தேசிய செயலரான ஹெச்,ராஜா தனது முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி குறித்து விமர்சித்துள்ளார். அதி. ராகுல்காந்தி ஒரு செமி இத்தாலியன் என்றும், அரைவேக்காடு அரசியல்வாதி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் அதிமுக கட்சியுடன் இணைந்து மக்களவைத் தேர்தலைச் சந்திக்க பாஜக கட்சி ஒரு தொகுதியிலும் வெற்றி பெறவில்லை. ஆனாலும் இருகட்சியும் கூட்டணியில் உள்ளனர். சமீபத்தில் அதிமுக தரப்பிலும் பாஜக தரப்பிலும் தேர்தலில் தங்கள் கட்சி இல்லாமல் வெற்றி பெற முடியாது எனக் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் பாஜக இல்லாமல் யாராலும் ஆட்சி அமைக்க முடியாது என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது: அமைச்சர்கள் செல்லூர் ராஜுவும், ஜெயக்குமாரும் பேசுவது சரியல்லை. அவர்கள் எல்லை மீறி பேசுவது கூட்டணிக்கும் பிரச்சனைக்கு வழிவகுக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.