Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
Tuesday, 15 April 2025
webdunia

புதுச்சேரியில் அரசியல் பரபரப்பு - தீர்க்க வருகிறாரா ராகுல்?

Advertiesment
ராகுல் காந்தி
, புதன், 17 பிப்ரவரி 2021 (08:01 IST)
பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று புதுச்சேரி வருகிறார். 

 
புதுவையில் கடந்த கடந்த சில ஆண்டுகளாக முதல் அமைச்சர் நாராயணசாமி மற்றும் கவர்னர் கிரண்பேடி ஆகிய இருவருக்கும் இடையே மோதல் இருந்து வந்தது என்பதும் இருவரும் மாறிமாறி விமர்சனம் செய்து கொண்டிருந்தனர் என்பதும் தெரிந்ததே. 
 
இந்நிலையில் காங்கிரஸ் எம்எல்ஏ ஒருவர் திடீரென ராஜினாமா செய்ததையடுத்து புதுவையில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக கூறப்பட்டது. 
 
இவை ஒருபுறம் இருக்க, துணைநிலை ஆளுநர் கிரண்பேடி திடீரென நீக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி அரசியலில் அடுக்கடுக்கான திருப்பங்கள் அரங்கேறி வரும் பரபரப்பான சூழலில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இன்று புதுச்சேரி வருகிறார். 
 
இன்று காலை 10:40 மணிக்கு புதுச்சேரி வரும் ராகுல் காந்தியை முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள், காங்கிரஸ் பிரமுகர்கள் விமான நிலையத்தில் வரவேற்கின்றனர். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மீண்டும் ஊரடங்கை சந்திக்க தயாராகுங்கள்: எந்த மாநில முதல்வர் கூறினார் தெரியுமா?