சென்னையில் முன்னேறி வரும் மேம்பட்ட ஸ்கின் கேர் மற்றும் எஸ்தெடிக் சிகிச்சை மையங்களில் ஒன்றான டெர்மிபியூர் டெர்மாக்ளினிக், அடையாரில் தனது நவீன தொழில் நுட்பங்களுடன் கூடிய புதிய கிளினிக்கை நடிகை பிரியா ஆனந்த் திறந்து வைத்ததன் மூலம் மிகப்பெரிய மைல் கல்லை எட்டியுள்ளது.
இந்த நிகழ்ச்சி, நவீன டெர்மடாலஜி மற்றும் காஸ்மெடாலஜி நிபுணத்துவத்தால் இயக்கப்படும் அடுத்த தலைமுறை ஸ்கின் கேர் தீர்வுகளை அறிமுகப்படுத்தும் டெர்மிபியூரின் பார்வையை வெளிப்படுத்தியது.அறிவியல் புதுமைகள், தனிப்பயன் சிகிச்சைகள் மற்றும் சர்வதேச சான்றளிக்கப்பட்ட ஸ்கின் தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்டு, இந்த கிளினிக் அழகு, நம்பிக்கை மற்றும் மருத்துவத் தரத்தை புதிய உயரத்துக்கு கொண்டு செல்லும் நோக்கம் கொண்டுள்ளது.
இந் நிகழ்வில் கலந்துகொன நடிகை பிரியா ஆனந்த் கூறியதாவது:
டாக்டர் சௌம்யா எனக்கு மிக நெருங்கிய தோழி. நான் முதல் முறையாக அவருடைய ஸ்கின் கிளினிக்கிற்கு வந்துள்ளேன். இது மிக அழகாகவும், சிறப்பாகவும் உள்ளது. ஸ்கின் கேர் தொடர்பான அனைத்துத் தொழில்நுட்ப வசதிகளும் இங்கு உள்ளன. எங்கள் போன்ற சினிமா துறையில் இருப்பவர்களுக்கு ஸ்கின் கேர் மிகவும் அவசியமான ஒன்று.
இங்கு அமெரிக்காவில் மட்டுமே பொதுவாக காணப்படும் பொலிலேஸ் லேசர் மெஷின் இருப்பதைப் பார்த்ததில் என்னால் மிகவும் மகிழ்ச்சி அடைய முடிந்தது.
அதோடு, பல முன்னேறிய வசதிகளும் உள்ளன. பல கிளினிக்குகளுடன் ஒப்பிடும்போது, இங்கு இந்த சேவைகள் மிகவும் குறைந்த விலையில் கிடைக்கின்றன. இது அழகு துறைக்கு ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும்.நான் பல டெர்மடாலஜிஸ்ட்களை சந்தித்துள்ளேன். பெரும்பாலோர் இத்தகைய தரமான மெஷின்களை வைத்திருக்க மாட்டார்கள்.
ஆனால் இங்கு ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டு, நிபுணர்களால் கை ஓட்டமாக தயாரிக்கப்பட்ட லேசர் மெஷின்களைக் கொண்டு வந்துள்ளனர். என் தோழியின் கிளினிக்கை அனைவரும் பயன்படுத்தி பயன் பெற வேண்டுகிறேன். இது புதிய தலைமுறைக்கு ஒரு உண்மையான வரப்பிரசாதமாக இருக்கும் என்று கூறினார்.
இது குறித்து டாக்டர் சௌம்யா கூறியபோது,
இன்றைய தலைமுறைக்கு ஸ்கின் கேர் பற்றிய விழிப்புணர்வு அதிகம் உள்ளது.அதே நேரத்தில், பல்வேறு ஸ்கின் பிரச்சினைகளையும் அவர்கள் எதிர்கொள்கிறார்கள்
இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்காகவே இந்த ஸ்கின் கிளினிக்கை தொடங்கியுள்ளோம்.இங்கு பர்மனென்ட் ஹேர் ரிடக்ஷன், பிக்மென்டேஷன் நீக்கம் உள்ளிட்ட பல சிறந்த சிகிச்சைகள் மற்றும் வசதிகளை வழங்குகிறோம்.பல ஸ்கின் கிளினிக்குகளில் லேசர் மெஷின்கள் இல்லாத சூழலில், ஜெர்மனி மற்றும் அமெரிக்காவில் இருந்து நவீன தொழில்நுட்பம் கொண்ட லேசர் மெஷின்களை நாங்கள் கொண்டு வந்துள்ளோம். எல்லோருக்கும் ஏற்ற விலையில் உயர்தர ஸ்கின் சிகிச்சைகளை வழங்குவதே எங்கள் குறிக்கோள.
இந்த கிளினிக்கைத் திறந்து வைத்ததற்கு என் தோழி பிரியா ஆனந்திற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிக்கிறேன் என்று கூறினார்.