Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !

Advertiesment
எங்களைக் குற்றவாளிப் போல நடத்துகிறார்கள் – அச்சக சங்கத்தினர் ஆதங்கம் !
, ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (13:26 IST)
சுபஸ்ரீ விவகாரத்தில் சர்ச்சையானதை அடுத்து அச்சக சங்கத்தினர் இன்னல்களை அனுபவிப்பதாக அச்சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.

பள்ளிக்கரணை அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயபால் இல்ல திருமண விழா பேனர் விழுந்ததில் விபத்து ஏற்பட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த விஷயம் சர்ச்சையானதை அடுத்து லாரி டிரைவர் மற்றும் அச்சகக் கடைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் பேனர் வைத்தவர்கள் மேல் எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை.

இந்நிலையில் இது சம்மந்தமாக தமிழ்நாடு டிஜிட்டல் பேனர் அச்சக சங்கத்தில் ஆலோசனைக் கூட்டம் கிண்டியில் நேற்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அதன் தலைவர் ‘எங்கள் வேலை பிரிண்டிங் செய்வது மட்டும்தான். அதைக் கட்டுவது எங்கள் வேலை அல்ல. அதைக் கட்டுபவர்கள் செய்யும் தவறினால்  எங்களுடைய ஒட்டுமொத்த தொழிலும் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது. இதனால் காவல்துறை அதிகாரிகள் எங்களைக் குற்றவாளிகள் போல நடத்துகிறார்கள். மாநகராட்சி அதிகாரிகள் கடைகளுக்கு சீல் வைப்பதும் எங்களால் ஏற்றுக்கொள்ளத் தக்கதல்ல’ எனக் கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகம் – கமல்ஹாசன் பேட்டி !