Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகம் – கமல்ஹாசன் பேட்டி !

Advertiesment
இடைத்தேர்தல் எனும் ஊழல் நாடகம் – கமல்ஹாசன் பேட்டி !
, ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (12:55 IST)
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளில் நடைபெற இருக்கும் இடைத்தேர்தல்களில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது என கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் காலியாக உள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி ஆகிய தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இத்தொகுதிகளில் அதிமுக மற்றும் திமுக ஆகிய இருக்கட்சிகளும் பலப்பரீட்சை செய்ய இருக்கின்றனர். அமமுக தேர்தலில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளது. இந்நிலையில் இப்போது மக்கள் நீதி மய்யமும் தேர்தலில் போட்டியிடாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார். அதில் ‘பழைய கொள்ளையர் கட்சிகளையும் அதன் கூட்டுப் பங்காளிகளையும் பெருவாரி மக்களின் எண்ணப்படி ஆட்சியிலிருந்து அகற்றி, 2021-ல் ஆட்சிப் பொறுப்பினை மக்கள் பேராதரவுடன் கைப்பற்றி மக்களாட்சிக்கு வழிவகுக்கும் முனைப்போடு மக்கள் நீதி மய்யம் கட்சி விரைவாக முன்னேறி வருகிறது.

நாங்குநேரியிலும் விக்கிரவாண்டியிலும் தங்கள் தலைவர்களையும் அவர்களின் தலைப்பாகைகளையுமாவது தக்கவைத்துக் கொள்ளலாம் என்கிற எண்ணத்துடன் ஆட்சியில் இருந்தவர்களும் ஆள்பவர்களும் போராடும் இடைத்தேர்தல் எனும் இந்த ஊழல் நாடகத்தில் மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது’ எனத் தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் ஊழல் ஊற்றெடுக்கிறது – துரைமுருகன் குற்றச்சாட்டு !