Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

விஜய் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போயிறாரு? உதயநிதி ஸ்டாலின்

விஜய் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போயிறாரு? உதயநிதி ஸ்டாலின்
, ஞாயிறு, 22 செப்டம்பர் 2019 (06:39 IST)
பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமென்றும், பேனரால் சமீபத்தில் உயிரிழந்த சுபஸ்ரீ மரணத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்றும் சமீபத்தில் ’பிகில்’ படத்தின் ஆடியோ விழாவில் நடிகர் விஜய் பேசினார். மேலும் பேனர் அச்சடித்த பிரின்டிங் பிரஸ்ஸை மூடுவதும், லாரி டிரைவரை கைது செய்வதும் மட்டும் போதாது என்றும் உண்மையான குற்றவாளியை போலீசார் கைது செய்ய வேண்டும் என்றும் அவர் தனது பேச்சில் வலியுறுத்தினார் 
 
விஜய்யின் இந்த பேச்சுக்கு ஆளும் கட்சியினர் பலரும் கண்டனம் தெரிவித்து வந்தனர். அதேநேரத்தில் எதிர்க்கட்சியினர் அவரது பேச்சை ஆதரிக்காமல் மௌனமாக இருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆளும்கட்சியின் விமர்சனத்திற்கு பதில் அளிக்காமல் நேற்று விஜய் வெளிநாட்டிற்கு சென்றுவிட்டார்
 
 
இந்த நிலையில் விஜய்யின் நண்பர்களில் ஒருவரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் இதுகுறித்து கருத்து கூறியபோது, ‘நண்பர் விஜய் என்ன சொன்னாலும் அவர்களுக்கு பிடிக்காது. அவர் பாட்டுக்கு ஏதேதோ சொல்லிட்டு போயிறாரு? இவர்கள் பாவம் புலம்புகின்றனர். விஜய் எதுவும் தப்பாக சொன்னதாக எனக்கு தோன்றவில்லை. பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டுமென்றும் உண்மையான குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பதும் அவர் என்பதுதான் அவரது கோரிக்கையாக இருந்தது. கண்டிப்பாக நான் விஜய்யின் கருத்தை ஆதரிக்கிறேன் என்று உதயநிதி தெரிவித்தார்.
 
 
webdunia
மேலும் பேனர் கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என்பதில் நாங்கள் தீவிரமாக உள்ளோம் என்றும், எங்கள் தலைவரும் மூன்று வருடமாக அதையேதான் சொல்லி வருகிறார் என்றும், கடந்த சில நாட்களாக இளைஞரணி சார்பாக நடந்த எந்த விழாவிலும் பேனர் வைக்கவில்லை என்பதையே நாங்கள் ஒரு பெரிய வெற்றியாக பார்க்கிறோம் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறியுள்ளார்

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஷூ, சாக்ஸ் – அமைச்சரின் அசத்தல் அறிவிப்பு