Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வேலைக்கு சேர்ந்த முதல் நாளே இளம்பெண் மர்ம மரணம் – அம்பத்தூர் தொழில் பூங்காவில் பரபரப்பு !

Advertiesment
அம்பத்தூர்
, சனி, 21 செப்டம்பர் 2019 (09:09 IST)
சென்னை அம்பத்தூரில் வேலைக்குச் சேர்ந்த முதல்நாளே இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர் டேனிதா ஜூலியஸ். பொறியியல் பட்டதாரியான இவர் அம்பத்தூர் தொழிற்பேட்டை, அம்பிட் பூங்கா சாலையில் உள்ள தனியார் ஐடி நிறுவனம் ஒன்றில் செப்டம்பர் 19 ஆம் தேதி வேலைக்குச் சேர்ந்துள்ளார்.

இந்நிலையில் வேலைக்கு சேர்ந்த முதல்நாளே அலுவலகக் கட்டிடத்தின் 8-வது மாடியிலிருந்து கீழே விழுந்து மர்மமான முறையில் இறந்துள்ளார். இந்நிலையில் இது சம்மந்தமாக விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர் டேனிதாவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

8 வது தளம் அடுக்குமாடிக் கட்டிடத்தின் மேல்தளம் என்பதாலும் அந்த பகுதி அனுமதி மறுக்கப்பட்ட பகுதி என்பதாலும் அவரது மரணத்தில் மர்மம் இருப்பதாக தெரிகிறது. இதனால் அம்பத்தூர் பகுதியில் நேற்று முழுவதும் பரபரப்பான சூழல் உருவானது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

உதயநிதிக்கு எவ்ளோ குடைச்சல் கொடுத்தீங்க... கெத்தா வெச்சி செஞ்ச வில்சன்!