தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், வரும் ஜனவரி 9, 2026 அன்று கடலூர் மாவட்டம், பாசார் கிராமத்தில் நடைபெறவுள்ள 'மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0' குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இந்த மாநாடு, "நன்றி மறந்தவர்கள், துரோகம் செய்தவர்கள் மற்றும் மக்கள் நலனை புறக்கணித்தவர்களுக்கு பாடம் புகட்டும்" வகையில் அமையும் என்று பிரேமலதா தெரிவித்துள்ளார்.
விஜயகாந்த் மறைவுக்கு பிறகு கட்சி நடத்தும் முதல் மாநாடு இது என்பதால், இதன் வெற்றியை 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரமாகக் கருத வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
அனைத்து மாவட்டங்களிலிருந்தும் பொதுமக்களையும், தொண்டர்களையும் பெருந்திரளாக மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்று பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்.