Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

வைஃபை முக்கியமா? விவசாயிகளின் லைப் முக்கியமா? : பிரேமலதா பளீச்

Advertiesment
வைஃபை முக்கியமா? விவசாயிகளின் லைப் முக்கியமா? : பிரேமலதா பளீச்
, சனி, 7 ஏப்ரல் 2018 (15:47 IST)
விவசாயிகளின் லைப் முக்கியமா அல்லது வைஃபை முக்கியமா என தேமுதிக மகளிரணி தலைவி பிரேமலதா கேள்வி எழுப்பியுள்ளார்.
 
உச்ச நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்தாததோடு, காவிரி மேலாண்மை வாரியத்திற்கு பதில் வேறு குழுவை அமைக்க மத்திய அரசு முடிவெடுத்தது. அதற்கும் 3 மாத கால அவகாசம் வேண்டும் எனக்கோரி உச்ச நீதிமன்றத்தில் மனுவும் தாக்கல் செய்துள்ளது. இந்த விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
webdunia
 
இதனால் தமிழகம் முழுவதும் மாணவர்களும், பொதுமக்களும் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். இதற்கிடையே நேற்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தமிழகத்தின் ஐந்து முக்கிய நகரங்களில் அம்மா இலவச ‘வை ஃபை’ சேவையை துவங்கி வைத்தார்.
 
இது குறித்து திரூவாரூரில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா விஜயகாந்த், எடப்பாடி அரசு தமிழகத்தில் நடக்கும் போராட்டங்களுக்கு மத்தியில் வைஃபை திட்டத்தை தொடங்கி வைத்துள்ளது. லைப்பே இல்லாமல் போகிறதே என்ற கவலையில் விவசாயிகள் உள்பட அனைவரும் போராடிவரும் நிலையில், இந்த திட்டத்தை முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ளார்கள் என்று கூறியுள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மான் வேட்டை வழக்கு - சல்மான் கானிற்கு ஜாமீன்