பிரிட்டன் நாடாளுமன்றத்தில் வைக்கப்பட்டுள்ள வைஃபையை அந்நாட்டு பிரதமர் தெரஸா மே உள்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் பயன்படுத்தி வருகின்றனர். இந்த வைஃபை ஒரு குறிப்பிட்ட கிலோ மீட்டர் வரை செயல்படும் திறன் உள்ளது என்பதால் அந்த பகுதியில் இருக்கும் பொதுமக்கள் சிலரும் இலவசமாக பயன்படுத்தி வந்தனர்.
ஆனால் அவர்களில் ஒருசிலர் ஆபாச படம் பார்க்க முயற்சித்ததாக நாடாளுமன்றத்திற்கு புகார் வந்தது. இதனையடுத்து நாடாளுமன்ற வைஃபை மூலம் ஆபாச இணையதளங்களை பார்க்க முயற்சிப்பவர்களின் நடவடிக்கையை முறியடிக்க என தனித்துறை நியமனம் செய்யப்பட்டது
இந்த துறை அதிகாரிகள் தினமும் ஆபாச படம் பார்க்க முயற்சிப்பவர்களின் 160 முயற்சிகளை நாள்தோறும் முடியடித்ததாக தகவல் அறியும் சட்டம் வாயிலாக தெரியவந்துள்ளது. அதாவது கடந்த ஆண்டு ஜூன் முதல் 24,473 முறை ஆபாச இணையதளங்களை திறக்க முயற்சித்தவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது