பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் உடல்நல குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் அவர்கள், மருத்துவமனைக்கு நேரில் சென்று தனது தந்தையின் உடல்நிலை குறித்து விசாரித்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும் இன்று டாக்டர் ராமதாஸ் அவர்களுக்கு ஆஞ்சியோ சிகிச்சை அளிக்கப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது. மேலும், அவர் 24 மணி நேரமும் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருப்பதாகவும், விரைவில் அவரது உடல்நிலை குறித்த அறிக்கை வெளியாகும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
தந்தைக்கும் மகனுக்கும் இடையே அரசியல் ரீதியான கருத்து வேறுபாடுகள் இருப்பதாக கூறப்பட்டாலும், தந்தையின் உடல்நிலை சரியில்லை என்று அறிந்தவுடன் அன்புமணி அவர்கள் உடனடியாக நேரில் சென்று விசாரித்தது, இரு தரப்புக்கும் இடையே ஒற்றுமையை உருவாக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.