Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அதிமுககாரங்க தான் கள்ளச்சாராயம் காய்ச்சினது.. அமைச்சர் பொன்முடி..!

Webdunia
திங்கள், 15 மே 2023 (17:10 IST)
தமிழகத்தில் கள்ளச்சாராய கலாச்சாரம் தலைவிரித்து ஆடுகிறது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி குற்றம் சாட்டிய நிலையில் கள்ளச்சாராயம் காய்சியதே அதிமுக காரங்கதான் என அமைச்சர் பொன்முடி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
மரக்காணம் அருகே கள்ளச்சாராயம் குடித்த 11 பேர் பரிதாபமாக பலியான நிலையில் இந்த விவகாரம் அரசியல் கட்சிகள் மத்தியில் பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கள்ளச்சாராயத்தால் பலியான சம்பவத்திற்கு தார்மீக பொறுப்பேற்று முதல்வர் மு க ஸ்டாலின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.
 
இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் பொன்முடி ’அதிமுக ஆட்சியில் இருந்தே கள்ளச்சாராயம் காய்ச்சப்பட்டு வருகிறது என்றும் குறிப்பாக அதிமுக கட்சிக்காரர்கள் தான் கள்ளச்சாராயம் காய்ச்சி வருகிறார்கள் என்றும் ஏதோ புதிதாக இப்போதுதான் கள்ளச்சாராயம் காய்ச்சுவது போல் எடப்பாடி பேசி வருகிறார் என்றும் தெரிவித்தார். 
மேலும் கள்ளச்சாராயத்தை ஒழிக்க வேண்டும் என தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.
 
Edited by Mahendran

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகாராஷ்டிரா தேர்தலை ரத்து செய்ய தாக்கல் செய்யப்பட்ட மனு: உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

வெளிமாநிலங்களில் வேலை பார்ப்பவர்கள் திரும்பினால் மாதம் ரூ.5000 உதவித்தொகை: மம்தா பானர்ஜி

விமான நிலையங்களை போல ரயில்வே நிலையங்களும்: பயணிகளின் உடமைகளுக்கு புதிய விதிகள் அமல்

டி.ஆர்.பாலு மனைவி மறைவுக்கு நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் ஸ்டாலின்.. இரங்கல் அறிக்கை..!

சிறுவனை கடித்து இழுத்துச் சென்ற தெரு நாய்கள்.. ஓடி வந்து மீட்ட தாய்! - அதிர்ச்சி வீடியோ!

அடுத்த கட்டுரையில்
Show comments