சொத்து குவிப்பு வழக்கில் பொன்முடிக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டதை அடுத்து அவரது எம்எல்ஏ மற்றும் அமைச்சர் பதவி தானாக போய்விட்டது. ஆனாலும் அவருக்கு முப்பது நாட்கள் மேல்முறையீடு செய்ய தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர் உடனே சிறைக்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை
இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை நிறுத்தி வைக்க பொன்முடி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை வைக்கப்படும் என்றும் அந்த கோரிக்கையை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டால் மீண்டும் அவருக்கு பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த ஒரு வாய்ப்பை தவற அவரது பதவி தப்பிக்க வேறு வழியில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் தண்டனையை நிறுத்தி வைக்க உச்சநீதிமன்றம் அனுமதி தரவில்லை என்றால் அவரது பதவி காலியானது காலியானது தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உச்ச நீதிமன்றத்தில் தற்போது கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதை அடுத்து உடனடியாக மேல்முறையீடு செய்ய முடியாத நிலை ஏற்பட்டது.
ஜனவரி முதல் வாரம் உச்சநீதிமன்றம் திறக்கப்படும் போதுதான் பொன்மொடியின் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது..