அமைச்சர் பொன்முடி சொத்து பூவைப்பு வழக்கில் ஏற்கனவே அவருக்கு அவர் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று அவருக்கு ஆன தண்டனை வழங்கப்பட உள்ளது.
சட்ட வல்லுநர்கள் இந்த வழக்கு குறித்து கருத்து தெரிவித்த போது இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை கிடைக்க அதிக வாய்ப்பு இருப்பதாக கூறுகின்றனர் மேலும் 356-வது பிரிவின் படி ஆட்சியை கலைக்க முடியாது என்றாலும் இந்த தீர்ப்பை வைத்து ஆட்சியை கலைக்க பாஜக முயற்சி செய்யும் என்றும் அரசியல் வல்லுநர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமைச்சர் பொன்முடி இன்று நீதிமன்றத்துக்கு வருகை தந்திருக்கிறார். அவர் அமைச்சருக்கான தேசியக்கொடி ஏந்திய காரில் வராமல் சாதாரண காரில் வந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது
அவரது காரில் வழக்கமாக பயன்படுத்தும் தேசியக்கொடி இல்லை. வேறு வாகனத்தில் அவர் வந்ததாகவும் தற்போது அவர் ஐகோர்ட்டில் அறையின் 46 இல் காத்திருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளன.
இன்னும் ஒரு சில நிமிடத்தில் நீதிபதி வருகை தந்து பொன்முடி வழக்கின் சிறை தண்டனை குறித்த அறிவிப்பை வெளியிட இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.