அமைச்சர் பொன்முடியின் அமைச்சர் பதவி மட்டுமின்றி எம்எல்ஏ பதவியும் இன்று காலியாகிவிடும் என பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு என்ன தண்டனை என்பது குறித்த அறிவிப்பு என்று வெளியாக உள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த வானதி சீனிவாசன் அமைச்சர் பொன்முடிக்கு அமைச்சர் பதவி மட்டுமல்ல, எம்எல்ஏ பதவியும் இன்றைய தீர்ப்புக்கு பின்னர் காலியாகும் என்று தெரிவித்தார்.
செந்தில் பாலாஜி ஜெயில் இருந்தும் துறையில்லாத அமைச்சர் என நம்மை ஏமாற்றி வருகின்றனர் என்றும் திமுக எம்எல்ஏக்கள் அமைச்சர்கள் குற்றம் சுமத்தப்பட்ட நபர்களாக இருந்தும் நல்லவர்களாக காட்டிக்கொள்கின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் மீட்புப்பணிக்கு ராணுவ வீரர்களை அனுப்பியது மத்திய அரசு என்றும் ஆனால் திமுக மக்களை ஏமாற்றும் வேலையை செய்து வருகிறது என்றும் மத்திய அரசு கொடுத்த 1200 கோடி பணத்தில் தான் தற்போது 6 ஆயிரம் ரூபாய் பணம் கொடுக்கப்பட்டது என்றும் அதுவும் வங்கி கணக்கில் பணத்தை செலுத்தாமல் டோக்கன் தருகிறோம் என்று ஏமாற்றி அதிலும் ஊழல் செய்து வருகின்றனர் என்றும் பெண்களை வரிசையில் நிற்க வைத்து அலைக்கழித்து வருகிறார்கள் என்றும் வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.