Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

ரூம் போட்டு யானைத் தந்தத்தை விற்க முயன்ற கொள்ளையர்கள் - சுற்றி வளைத்த போலீஸ்

Advertiesment
ரூம் போட்டு யானைத் தந்தத்தை விற்க முயன்ற கொள்ளையர்கள் - சுற்றி வளைத்த போலீஸ்
, செவ்வாய், 28 ஆகஸ்ட் 2018 (10:09 IST)
கடலூரில் ரூம் போட்டு  யானைத் தந்தத்தை விற்க முயன்றவர்களை மஃப்டியில் சென்ற போலீஸார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.
கடலூர் - சிதம்பரம் பிரதான சாலையில் உள்ள விடுதி ஒன்றில் மர்ம நபர்கள் சிலர் யானைத் தந்தத்தை விற்க முயற்சித்து வருவதாக போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
 
அந்த நபர்களை உடனடியாக பிடிக்க நினைத்த போலீஸார் உடனடியாக தனிப்படை அமைத்தனர். அவர்கள் இருக்கும் விடுதியில் போலீஸார் மப்டியில் நோட்டமிட்டனர். அவர்கள் தந்தத்தை விற்க சிலருடன் போனில் பேரம் பேசிக் கொண்டிருந்தனர். பின் தடாரென அவர்கள் தங்கிருந்த ரூமின் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்ற போலீஸார் பிரகாஷ், சிலம்பரசன், கொளஞ்சி ஆகிய மூவரை கைது செய்தனர். 
webdunia
போலீஸார் அவர்களிடமிருந்த இரண்டு யானைத் தந்தந்தங்களை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ராஜபக்சேவுக்கு பாரத ரத்னா விருது: சுப்பிரமணியன் சுவாமியின் சர்ச்சை கோரிக்கை