Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தனது விடாமுயற்சியால் காவல்துறை அதிகாரியான திருநங்கை நஸ்ரியா

Advertiesment
தனது விடாமுயற்சியால் காவல்துறை அதிகாரியான திருநங்கை நஸ்ரியா
, வெள்ளி, 24 ஆகஸ்ட் 2018 (16:18 IST)
ராமநாதபுரத்தை சேர்ந்த திருநங்கை ஒருவர் தனது விடா முயற்சியின் காரணமாக காவல்துறை பணியில் சேர்ந்துள்ளார்.
திருநங்கைகள் வாழ்க்கையில் பல சவால்களை சந்திக்கின்றனர். பெற்றோர்கள், நண்பர்கள், சொசைட்டி என பல தரப்பிலிருந்தும் அவர்களை வெறுத்து ஒதுக்கினாலும் மனம் தளராமல் அவர்கள் வாழ்கின்றனர். இதற்கு மிகப்பெரிய எடுத்துக்காட்டே திருநங்கையான நஸ்ரியா தான்.
 
ராமநாதபுரத்தை சேர்ந்த திருநங்கையான நஸ்ரியா, வாழ்க்கையில் சொல்ல முடியாத அளவிற்கு பிரச்சனைகளை சந்தித்துள்ளார். பல சமயங்களில் அவர் தற்கொலை செய்யும் முடிவிற்கும் தள்ளப்பட்டாராம். ஆனாலும் மனம் தளராத அவர் காவல் துறையில் சேர தீவிர முயற்சியில் ஈடுபட்டார்.
 
அவரது முயற்சிக்கு பலனளிக்கும் வகையில் அவருக்கு போலீஸில் வேலை கிடைத்தது. அவர் சமீபத்தில் தான் பணியில் சேர்ந்தார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

சண்டையை தடுக்க சென்ற தந்தை திடீர் மரணம்; பதறிப்போன மகன்