திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் காவேரி மருத்துவமனையின் அறிக்கை வெளியானது. இதனால், திமுக தொண்டர்கள் காவேரி மருத்துவமனையின் முன் குவிய தொடங்கியுள்ளனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டுள்ளதாகவும். வயதுமூப்பு காரணமாக அவரது முக்கிய உடல் உறுப்புக்களை செயல்பட வைப்பத்தில் சவாலாக உள்ளது. அவரது முக்கிய உஅடல் உறுப்பின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது.
கருணாநிதியின் உடல்நிலை குறித்து தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மருத்துவ உதவிகளுடன் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்த 24 மணி நேரத்திற்கு பிறகு அவரது உடல் நிலை, சிகிச்சைக்கு எவ்வாறு ஒத்துழைக்கின்றனது என்பது பொருத்தே கணிக்க முடியும் என அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஏற்கனவே கருணாநிதியின் குடும்பத்தினர் காவேரி மருத்துவமனையில்தான் உள்ளனர். கருணாநிதியின் தனி மருத்துவர் கோபால், கி.வீரமணி, முத்தரசன், கவிஞர் வைரமுத்து, க.அன்பழகன், துரைமுருகன், தேமுதிகவின் சுதீஷ் ஆகியோரும் வருகை தந்துள்ளனர்.
அதோடு, தொண்டர்களும் அதிக அளவி குவியத்துவங்கியுள்ளதால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மடுத்துவமனை தரப்பில் அடுத்த 24 மணி நேரம் முக்கிய என கூறப்பட்டிருப்பதால் போலீஸார் பாதுகாப்பு காரணமாக மருத்துவமனையில் குவிக்கப்பட்டுள்ளனர்.