Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தூதுவிட்ட ராமதாஸ்?!.. கதவை சாத்திய சீமான்!... நடந்தது என்ன?...

Advertiesment
seeman
2026 சட்டமன்ற தேர்தல் நெருங்கும் நிலையில் தமிழகத்தில் உள்ள எல்லா அரசியல் கட்சிகளும் கூட்டணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றன. பெரும்பாலான கட்சிகள் அதிமுக அல்லது திமுக என கூட்டணி அமைத்து விட்ட நிலையில் காங்கிரஸ், தேமுதிக, டாக்டர் ராமதாஸின் பாமக ஆகிய மூன்று கட்சிகளும் இதுவரை எந்த கட்சியுடன் கூட்டணி என அறிவிக்கவில்லை.

காங்கிரஸை பொருத்தவரை விஜயின் தவெக பக்கம் போகலாமா? அல்லது திமுக பக்கம் செல்லலாமா? என யோசித்து வருவதாக தெரிகிறது. அதேநேரம், காங்கிரஸ் மேல்மட்ட தலைவர்களின் அறிவுரைப்படி திமுகவுடன் கூட்டணி அமைக்கவே அதிக வாய்ப்பிருப்பதாக கருதப்படுகிறது..

தேமுதிக 10 தொகுதிகள் மற்றும் ஒரு ராஜ்யசபா தொகுதி என கேட்பதால் அதிமுக, திமுக இரண்டு கட்சிகளுமே அதை கொடுக்க மறுக்கிறது. எனவே பேச்சுவார்த்தையில் இழுபறி நீடித்து வருகிறது.

ராமதாசை பொறுத்தவரை ஏற்கனவே அன்புமணி அதிமுக கூட்டணியில் இணைந்து விட்டார்.. திமுக பக்கம் செல்லலாம் என யோசித்தால் ஏற்கனவே திமுக கூட்டணியில் இருக்கும் திருமாவளவன் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார்.. பாமகவை கூட்டணியில் சேர்த்தால் நாங்கள் திமுக கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்றும் அவர் ஓப்பனாகவே சொல்லிவிட்டார். எனவே ராமதாஸுக்கு அங்கு செல்ல முடியாத நிலை..

இந்நிலையில்தான் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைக்கலாம் என்று நினைத்த ராமதாஸ் தரப்பு அக்கட்சியின் நிர்வாகிகளிடம் பேசியதாக தெரிகிறது. ஆனால் சீமான் பிடி கொடுக்கவில்லை என்கிறார்கள்.. அதோடு ‘வருகிற 21ஆம் தேதி நாங்கள் வேட்பாளர் பட்டியலை அறிவிக்க போகிறோம்.. விரைவில் சீமான் பிரச்சாரத்திற்கு கிளம்ப போகிறார்.. இப்போதுள்ள சூழ்நிலையில் ஐயா திமுக கூட்டணிக்கு போவதுதான் சரியாக இருக்கும்’ என சொல்லி கதவை சாத்தி விட்டார்களாம் நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

நீங்கள்தான் முதல்வர்!.. எடப்பாடி பழனிச்சாமியிடம் ஜோதிடர் சொன்னது என்ன?...