Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

புதிய எதிரிகளை நான் இப்படித்தான் பார்க்கிறேன்!.. விஜய் பற்றி பேசிய ஸ்டாலின்!...

Advertiesment
tvk vijay

Mahendran

, செவ்வாய், 3 பிப்ரவரி 2026 (16:48 IST)
நடிகர் விஜய் எப்போது அரசியல்வாதியாக மாறி பொதுக்கூட்டங்களில் பேச தொடங்கினாரோ அப்போது முதலே திமுகவை மிகவும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார்..முதலில் திமுகவுக்கும் தவெகவுக்கும் இடையேதான் போட்டி என கூறினார். அதன்பின் ஈரோடு பொதுக் கூட்டத்தில் திமுகவை தீய சக்தி என விமர்சித்தார்.. எதற்காக ஜெயலலிதா திமுகவை தீயசக்தி என விமர்சித்தார் என இப்போது யோசித்து பார்க்கிறேன்.. அது சரிதான் என்றெல்லாம் பேசினார்.

மேலும், சமீபத்தில் நடந்த தவெக மூன்றாம் ஆண்டு துவக்க விழாவில் பேசிய போது திமுகவை மீண்டும் தீயசக்தி மற்றும் டப்பா என்ஜின் என்றெல்லாம் விமர்சித்தார்..மேலும் இப்போது திருவள்ளுவர் உயிரோடு இருந்திருந்தால் ‘அநீதி அராஜகம் தில்லுமுல்லு இவையெல்லாம் திமுக முதற்றே உலகு’ என்று குறள் எழுதியிருப்பார்’ என்றெல்லாம் நக்கலடித்து பேசினார்..

இந்நிலையில் திமுக தலைவர் மற்றும் முதல்வர் மு.க ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் ‘புதிய எதிரிகளுக்கு என்ன செல்ல விரும்புகிறீர்கள்?’ என கேட்டதற்கு அவர் ‘நான் யாரையும் எதிரியாக பார்க்கவில்லை.. அவர்களையும் நண்பர்களாகத்தான் பார்ப்பேன்.. அவர்களுக்கு மரியாதை கொடுக்கிறேன்’ என பதில் சொல்லியிருக்கிறார்..

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

பிரதமர் மோடி நாட்டை விற்றுவிட்டார்.. ராகுல் காந்தி கடும் குற்றச்சாட்டு..!