மே ஒன்றாம் தேதி முதல் தமிழ்நாட்டில் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்பது உள்பட பல சிறப்பு அம்சங்கள் பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் சற்றுமுன் நிழல் நிதிநிலை அறிக்கையை வெளியிட்டார். அந்த நிதிநிலை அறிக்கைகள் உள்ள முக்கிய அம்சங்கள் இதோ:
▪️ மே 1ம் தேதியிலிருந்து மதுவிலக்கு தமிழ்நாட்டில் கொண்டுவரப்படும்;
▪️ ஒரு டன் கரும்புக்கு ரூ.5 ஆயிரம் வழங்கப்படும்;
▪️ என்எல்சி சுரங்கத்திற்கு நிலம் கையகப்படுத்தப்படாது;
▪️ பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும்;
▪️ தமிழ்நாடு போதையில்லா மாநிலமாக மாற்றப்படும்
▪️ பொதுத்துறை நிறுவனங்களை லாபத்தில் இயங்கச் செய்வதன் மூலம் ரூ.15,000 கோடி வருமானம்
▪️ ரூ.1.65 லட்சம் கோடி அளவுக்கு கூடுதலாக வருவாய் ஈட்டுவதன் மூலம், வரியல்லாத வருவாயின் அளவு ரூ.1.80 லட்சம் கோடி என்ற அளவை எட்டும்.
▪️ பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும்.
▪️ 2023-24 போதைப் பொருள் ஒழிப்பு சிறப்பாண்டு
▪️ 2023-24ஆம் ஆண்டு போதைப் பொருட்களை ஒழிப்பதற்கான சிறப்பாண்டாக கடைப்பிடிக்கப்படும்.
▪️ ரூ.3.88 லட்சம் கோடி கடன் ஐந்தாண்டுகளில் அடைக்கப்படும்
▪️ மீதமுள்ள கடனை 10 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழ்நாடு அரசு செலுத்தினால் போதுமானது.
▪️ தமிழ்நாடு அரசு அடுத்த 10 ஆண்டுகளில் செலுத்த வேண்டிய ரூ.3,88,882.20 கோடி கடனை அடுத்த ஐந்தாண்டுகளில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
▪️ வரி அல்லாத வருவாயை ரூ.1.80 லட்சம் கோடியாக உயர்த்த சிறப்புத் திட்டம்
▪️ தமிழ்நாட்டில் அனைத்து மது, பீர் ஆலைகள் மூடப்படும்.
▪️ குட்காவை தடை செய்ய புதிய சட்டம் இயற்றும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும்.
▪️ ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000
▪️ வறுமைக் கோட்டிற்குக் கீழ் வாழும் குடும்பங்களுக்கு அடிப்படை வருமானமாக மாதம் ரூ.2,000 வழங்கும் திட்டம் வரும் ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல் செயல்படுத்தப்படும்.
▪️ ஏழைக் குடும்பங்களுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்பட்டாலும், அக்குடும்பங்களுக்கு அரசால் வழங்கப்படும் பிற சமூகப் பாதுகாப்பு திட்ட உதவிகளும் தொடர்ந்து வழங்கப்படும்.
▪️ முதியோர், ஆதரவற்றோருக்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் மாதம் ரூ.1,500 நிதியுதவி வழங்கப்படும். 20 லட்சம் பேருக்கு இந்த நிதியுதவி வழங்க ரூ.3,600 கோடி ஒதுக்கப்படும்.
▪️ 2023-24ஆம் ஆண்டில் 1.50 லட்சம் பேருக்கு அரசு வேலை