Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்: ஆன்லைன் மசோதா குறித்து அன்புமணி

Advertiesment
Anbumani
, வியாழன், 9 மார்ச் 2023 (11:15 IST)
ஆன்லைன் சூதாட்ட தடை மசோதா கடந்த அக்டோபர் மாதம் சட்டசபையில் இயற்றப்பட்ட நிலையில் அந்த சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் காலம் தாழ்த்தி வந்ததாக பலமுறை பாமக தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியிருந்தார். 
 
இந்த நிலையில் தற்போது அந்த மசோதாவை கவர்னர் திருப்பி அனுப்பி உள்ளதை அடுத்து உடனடியாக இது குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டுங்கள்  என அன்புமணி ராமதாஸ் அறிவித்துள்ளார். 
 
ஆன்லைன் சூதாட்டம் தடை சட்ட விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டங்கள் என்றும் பட்ஜெட் தொடரில் ஆன்லைன் தடை மசோதாவை மீண்டும் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 
 
ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தை ஆளுநர் தாமதமாக திருப்பி அனுப்பியது கண்டிக்கத்தக்கது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈபிஎஸ் படத்தை எரித்ததன் எதிரொலி: அண்ணாமலை படத்தை எரித்த அதிமுகவினர்..!