Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ஆன்லைன் சூதாட்டம்: 15 பேரின் தற்கொலைகளுக்கும் ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும்- அன்புமணி ராமதாஸ்

anbhumani
, சனி, 4 மார்ச் 2023 (13:48 IST)
ன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.இரவி தான் பொறுப்பேற்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த சேலையூர் என்ற பகுதியில் உள்ள மாடம்பாக்கத்தைச் சேர்ந்த மருந்து விற்பனை பிரதிநிதி வினோத்குமார்( 36) .இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் விளையாடி, அதில் ரூ. 20 லட்சத்தை இழந்ததால் மனவிரக்தியில் தற்கொலை செய்துகொண்டார்.

இதற்காக அவர், பல்வேறு லோன் ஆப்களில் அவர் கடன் பெற்று சூதாட்டத்தில் விளையாடி பணத்தை இழந்து, கடன் கொடுத்தவர்களின் நெருக்கடியால் தற்கொலை செய்து கொண்டதாக போலீசாரின் முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் , இதுவரை ஆன்லைன் சூதாட்டத்தால் உயிரிழந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும்  ஆளுனர் தான் பொறுப்பேற்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தன் டுவிட்டர் பக்கத்தில், ’’சென்னையையடுத்த மாடம்பாக்கத்தைச் சேர்ந்த வினோத்குமார் என்ற மருந்து நிறுவன அதிகாரி ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.20 லட்சத்தை இழந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது அதிர்ச்சியளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கு இரங்கல், அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்

ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் அக்டோபர் 18-ஆம் தேதி நிறைவேற்றப்பட்டு, இன்றுடன் 138 நாட்களாகியும் இன்னும் ஆளுனர் ஒப்புதல் அளிக்கவில்லை. அதன்பிறகு நடந்த 15 பேரின் தற்கொலைகளுக்கும் தமிழ்நாடு ஆளுனர் ஆர்.என்.இரவி தான் பொறுப்பேற்க வேண்டும்.

தமிழ்நாட்டிற்கு ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ஏன் தேவை?  என்பதை புள்ளிவிவரங்களுடன்  தமிழக அரசு விளக்கியுள்ளது. இனியும் தாமதிக்காமல் ஆளுனர் ஒப்புதல் அளிக்க வேண்டும்.  அதற்காக அவரை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து  வலியுறுத்த வேண்டும்.’’என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

வதந்தி பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை: முதல்வர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை..!