நான் தற்போது ஆட்சியில் இருந்திருந்தால் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
கடந்த சில மாதங்களாக ஆன்லைன் சூதாட்டம் காரணமாக தற்கொலைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்பதும் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்யும் மசோதாவுக்கு கவர்னர் விரைவில் அனுமதி அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நான் ஆட்சிக்கு வந்தால் முதல் நாள் முதல் கையெழுத்து பூரண மதுவிலக்கு தான் என்றும் அதன் பிறகு நான் ஆட்சியில் இருந்தால் 162 வது பிரிவு மூலம் ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்திருப்பேன் என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் சர்வதேச மகளிர் தினம் குறித்து கூறிய போது ஆணின் வெற்றிக்குப் பின் பெண் உள்ளதாக கூறுவது சுயநலம் என்றும் இருவரும் வெற்றிக்கு பின்னால் இருவரும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.