Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

பிளஸ் 2 மாணவன் ஓட்டிய கார் விபத்து.. காஞ்சிபுரம் மூதாட்டி பரிதாப பலி..!

Advertiesment
Accident

Siva

, ஞாயிறு, 23 பிப்ரவரி 2025 (16:04 IST)
காஞ்சிபுரத்தில் பிளஸ் டூ மாணவன் ஓட்டிய கார் விபத்துக்குள்ளாகி, மூதாட்டி ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
காஞ்சிபுரம் கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்த சரஸ்வதி என்பவர் இன்று காலை தனது வீட்டில் கோலம் போட்டுக்கொண்டு இருந்தார். அப்போது, பக்கத்து வீட்டில் வசிக்கும் பிளஸ் டூ மாணவர் ஒருவர், தனது தந்தை பயன்படுத்தும் காரை ஓட்டுவதற்காக ஸ்டார்ட் செய்தார்.
 
ஆனால் அந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, கோலம் போட்டுக்கொண்டு இருந்த சரஸ்வதி மீது மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சரஸ்வதி சக்கரத்தில் சிக்கிக்கொண்டதால், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
 
இதைக் கண்ட பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். காவல்துறையினர் விரைந்து வந்து, காரை ஓட்டிய மாணவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சரஸ்வதி உடலை பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 
பிளஸ் டூ மாணவரின் தந்தை முருக்கு, அதிரசம் போன்ற தின்பண்டங்களை தயாரித்து, காரில் சென்று விற்பனை செய்து வருகிறார். அவருடைய காரைத்தான் மாணவன் ஓட்டிய போது, திடீரென கட்டுப்பாட்டை இழந்து விபத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Siva

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தமிழ்நாட்டில் லட்சக்கணக்கான மக்கள் ஹிந்தி சான்றிதழ் வகுப்பு படிக்கிறார்கள்: ஆர் எஸ் எஸ் தகவல்