Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்.. மோடிக்கு வாழ்த்துக்கள்: ஈபிஎஸ்

Advertiesment
மோடி

Mahendran

, புதன், 7 மே 2025 (13:18 IST)
நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான் என்றும் ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை வெற்றிகரமாக நடத்திய பிரதமர் மோடிக்கு வாழ்த்துக்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பஹல்காமில் அப்பாவி பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் மீதான பயங்கரவாத தாக்குதல் என்பது, நம் நாட்டின் மீது தொடுக்கப்பட்ட மிகக் கொடுமையான, மனிதத்திற்கே எதிரான போர்.
 
பயங்கரவாதத்திற்கு இந்தியா ஒருபோதும் அடிபணியாது என்பதை #OperationSindoor திடமாக நிரூபித்துள்ளது.
 
"நம்முடைய போர் பயங்கரவாதிகளுக்கு எதிராகத் தான்" என்று தெளிவாக வரையறுத்து, பொதுமக்களுக்கு பாதிப்பின்றி, பயங்கரவாதிகளின் முகாம்களை தகர்த்தெறிந்து, "ஆபரேஷன் சிந்தூரை" வெற்றிகரமாக முடித்த நம் இந்திய இராணுவப் படையின் தீரம் பெருமைக்குரியது.
 
இத்தீரமிகு பதிலடியை முன்னின்று அளித்த மாண்புமிகு இந்தியப் பிரதமர் 
திரு. நரேந்திரமோடி அவர்களின் தலைமையிலான மத்திய அரசுக்கு அதிமுக
 சார்பில் வாழ்த்துகள்.
 
வாழ்க, வெல்க தாய்த் திருநாடு!
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஆபரேசன் சிந்தூர் தாக்குதலை கேள்விப்பட்டு கதறி அழுதேன்: பஹல்காமில் கணவரை இழந்த பெண்..!