Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

போர் எதிரொலி! உளவுத்துறை பரிந்துரை! பிரதமர் மோடிக்கு பாதுகாப்பு அதிகரிப்பு!

Advertiesment
PM Modi INS Vikrant

Prasanth Karthick

, புதன், 7 மே 2025 (11:40 IST)

பாகிஸ்தான் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலை தொடர்ந்து பிரதமர் மோடி உள்ளிட்ட தேசத் தலைவர்களுக்கான பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

 

பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்திய ராணுவம் ‘ஆபரேஷன் சிந்தூர்’ மூலம் பயங்ரவாதிகள் முகாம்களில் தாக்குதல் நடத்தியுள்ளது. 9 பகுதிகளில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல்களில் 80க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகளும், அவர்களது ஆயுத கிடங்குகளும் அழிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

 

மேலும் இந்த தாக்குதலின் எதிரொலியாக பாகிஸ்தான் மற்றும் பயங்கரவாத அமைப்புகள் இந்தியாவில் ஏதாவது அசம்பாவிதம் செய்ய முயலலாம் என்பதால், பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டு வருகின்றன. விமான நிலையங்கள் உச்சக்கட்ட பாதுகாப்பில் உள்ளன.

 

இந்நிலையில் பிரதமர் மோடி, குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசு தலைவர் ஜெக்தீப் தன்கர் உள்ளிட்ட தேசத் தலைவர்களுக்கான பாதுகாப்பு மேலும் அதிகப்படுத்தப்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களுக்கு அவர்கள் முக்கிய அலுவல்கள் தவிர்த்து வேறு எதிலும் கலந்துக் கொள்ள மாட்டார்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளது. உளவுத்துறை தகவலின் அடிப்படையில் அவர்களது அடுத்த சில நாட்களுக்கான பயணம் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 

Edit by Prasanth.K


Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஒரு வீரனின் போர் தொடங்கிவிட்டது! - பிரதமர் மோடியை குறிப்பிட்டு ரஜினிகாந்த் ட்வீட்!