இந்திய ராணுவம் 12 நாட்கள் பக்காவாக திட்டமிட்டு, 13-வது நாள் தாக்குதல் நடத்தியது தான் "ஆபரேஷன் சிந்தூர்" என தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஜம்மு காஷ்மீரில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு பின்னர், பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்பின் முகாம்களை அழிக்க இந்திய ராணுவம் முடிவு செய்தது. அப்பாவி சுற்றுலாப் பயணிகளில் மரணத்திற்கு பழிவாங்க, பதிலடி கொடுக்க தீவிர நடவடிக்கை எடுக்க ராணுவம் மற்றும் முப்படை தளபதிகள் ஆலோசனை செய்தனர்.
இந்த நிலையில் தான் "ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் இலக்குகளை குறி வைத்து தாக்க 12 நாட்கள் திட்டமிடப்பட்டதாகவும், 13-வது நாள் தாக்குதல் நடைபெற்றதாகவும் பாதுகாப்புத் துறையிலிருந்து தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிரி நாட்டின் உளவுத்துறை அமைப்புகளையும், பாதுகாப்பு அமைப்புகளையும் முழுமையாக குழப்பத்தில் வைத்திருந்த இந்தியா, தொடர்ந்து தனது யுத்திகளை மாற்றி 12 நாட்கள் கவனமாக திட்டமிட்டு "ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.