2019-20 நிதியாண்டுக்கான தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் சட்டப்பேரவையில் சற்று முன்னர் ஆரம்பித்தது.
நாடாளுமன்றத் தேர்தல் காரணமாக வழக்கமாக மார்ச் மாதம் தாக்கல் செய்யப்படும் தமிழக பட்ஜெட் இந்த ஆண்டு தேர்தலால் முன்கூட்டியேத் தாக்கல் செய்யப்படுகிறது. தேர்தலை முன்னிட்டு பல சலுகைகள் நிறைந்ததாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
சற்று முன்னர் சட்டப் பேரவையில் தமிழகப் பட்ஜெட்டை துணை முதல்வரும் நிதியமைச்சருமான ஓ பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சங்களாக விவசாயப் பிரச்சனைகள் மற்றும் குடிநீர் பிரச்சனைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட்டின் சில முக்கிய அம்சங்கள்
1.உள்ளாட்சி அமைப்புகளுக்கு 5,178 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
2. பருவ மழைப் பொய்த்து தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளதால் குடிநீர் வழங்கல் துறைக்கு 18,700 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது
3.வீட்டு வசதி துறைக்கு 6,265 கோடி ஒதுக்கீடு
4.விவசாயிகளுக்கு 10000 கோடி ரூபாய் வரைப் பயிர்க்கடன் வழங்கப்படும் என அறிவிகப்பட்டுள்ளது
5.வறுமைக் கோட்டிற்குக் கீழ் வரும் குடும்பங்களுக்கு விரிவான மருத்துவக் காப்பீடு
6. 2019 - 2020 ஆம் ஆண்டுக்கான செலவினங்கள் 2 லட்சத்து 8 கோடியாக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
7. சென்னை மாநல்கரில் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான பார்க்கிங்கள் அமைக்க 2000 கோடி செலவு செய்யப்பட இருக்கிறது.
8. விபத்து மூலம் ஏற்படும் உயிரிழப்புகளுக்கு ரூ. 4 லட்சம் நிவாரணத் தொகையும் நிரந்தரமான ஊனத்திற்கு ரூ. 1 லட்சம் நிவாரணமும் அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
9. ராமேஸ்வரத்தில் மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் பெயரில் புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி நிறுவப்படும்
9. தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறைக்கு நடப்பாண்டில் ரூ403.76 கோடி ஒதுக்கீடு.
10. 2019-20ல் தமிழக அரசின் வருவாய் ₹ 1,97,721 கோடியாக இருக்கும் என அறிவிப்பு
11. 2019 - 2020ல் தமிழக அரசின் கடன் ₹3,97,495 கோடியாக இருக்கும்
12. தமிழக அரசின் நிதி பற்றாக்குறை 2019-20ம் ஆண்டில் ₹44,176 கோடியாக இருக்கும்
13. தமிழகம் முழுவதும் உள்ள ஏரிகளை பராமரிக்க ரூ.300 கோடி ஒதுக்கப்படுகிறது.
14. அண்ணா பல்கலையில் உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள 100 கோடி ரூபாய் நிதி வழங்கப்படும்
15. சூரிய மின்சக்தியுடன் கூடிய 2019-2020 ஆம் ஆண்டில் 20,000 வீடுகள் கட்டித்தரப்படும்