கர்நாடகாவில் பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு முன்னதாகவே கூட்டணி அரசு கவிழும் என கர்நாடக எதிர்கட்சி தலைவர் எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
கர்நாடகா தேர்தல் நடந்த போது பெரும்பான்மை இல்லாத காரணத்தால் பாஜக ஆட்சி செய்ய முடியாமல் போனது. ஆனால், மஜக மற்றும் காங்கிரஸ் கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வருகிறது. இதற்கிடையே காங்கிரஸ் மஜத கூட்டணியில் பிளவுகள் இருப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் கர்நாடக எதிர்கட்சித் தலைவர் எடியூரப்பா பேசியதாவது, வரும் வெள்ளிக்கிழமை முதலமைச்சர் குமாரசாமி பட்ஜெட் தாக்கல் செய்ய இருக்கிறார். கூட்டணிக்குள் உள்ள குழப்பத்தால் பட்ஜெட் தாக்கலுக்கு முன்னரே கூட்டணி ஆட்சி கண்டிப்பாக கவிழும் என கூறினார். இவரது இந்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.