இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக் பாஜகவில் இணைந்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாஜக மற்றும் காங்கிரஸ் போன்ற கட்சிகள் தங்கள் கட்சிகளுக்கான வேட்பாளர்களைத் தேடும் முனைப்பில் உள்ளனர். தங்கள் கட்சி பலவீனமாக இருக்கும் தொகுதிகளில் நல்ல பிரபலமான முகங்களை நிறுத்தி வாக்குகளை அதிகரிக்க திட்டம் தீட்டியுள்ளன. அதற்காக சினிமா நடிகர்கள் முதல் கிரிக்கெட் வீரர்கள் வரை யாரை நிறுத்தலாம் என யோசித்து வருகின்றனர்.
இது சம்மந்தமாக ஹரியானா மாநிலத்தில் ரோஹ்தர் தொகுதியில் சேவாக்கை நிறுத்த பாஜக முயன்று வருவதாகவும் அதற்காக அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. குறிப்பிட்டத் தொகுதியில் பாஜக தொடர்ந்து 3 முறையாக போட்டியிட்டுத் தோல்வியடைந்துள்ளதால் சேவாக்கை நிறுத்தும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகத் தெ
ரிகிறது.
ஆனால் இந்தத் தகவலை பாஜகவின் ஹரியானா மாநிலத் தலைவர் சுபாஷ் பரலா முற்றிலுமாக மறுத்துள்ளார். மேலும் சேவாக் கட்சியில் அடிப்படை உறுப்பினர் பதவியில் கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து சேவாக்கிடம் இருந்து இன்னும் எந்த பதிலும் வரவில்லை.