Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பேஸ்மெண்ட் ஸ்ராங்கு... இழுத்தடிக்காமல் பொட்டுனு போட்டுடைத்த ஓபிஎஸ்!!

பேஸ்மெண்ட் ஸ்ராங்கு... இழுத்தடிக்காமல் பொட்டுனு போட்டுடைத்த ஓபிஎஸ்!!
, புதன், 20 நவம்பர் 2019 (15:03 IST)
மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், அரசியல் கட்சிகள் தற்போது முதலே உள்ளாட்சி தேர்தலுக்கு தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக, அதிமுக,தேமுதிக, பாஜக ஆகிய கட்சிகள்  விருப்ப மனு விநியோகத்தை துவங்கியுள்ளன.   
 
அதிமுக கூட்டணியில் உள்ள பாஜக அதிமுகவிடம் இருந்து 25% இடங்களை கேட்க முடிவு செய்துள்ளதாம். குறிப்பாக கோவை, திருப்பூர், நாகர்கோவில் மாநகராட்சியையும் பாஜக குறிவைத்து காய்நகர்த்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அதேபோல தேமுதிகவும் 3 இடங்களை கேட்க உள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.  
webdunia
இந்நிலையில், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது என அதிமுக முடிவெடுத்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மொத்தமுள்ள 15 மேயர் பதவிகளில் கூட்டணி கட்சிகளுக்கு குறைந்தபட்சம் 2 மேயர் சீட்டுகளை ஆவது அதிமுக கொடுக்க வேண்டும். கூட்டணி கட்சிகளுக்கு அதிக சீட் கொடுத்தால் அதிமுக சிக்கலில் சிக்கிவிடும்.  
 
ஒன்று கட்சிக்குள் அதிருப்தி ஏற்படும் அல்லது தேர்தலில் தோல்விபெற நேரிடும். எனவே மறைமுக தேர்தலை கொண்டு வந்து தப்பித்துக்கொள்ளாம் என கணக்கு போட்டு அதிமுக இது குறித்து பேசியிருக்கலாம் என கூறப்பட்டது. 
webdunia
ஆனால், மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படவில்லை என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது அதிமுகவின் அடித்தளம் பலமாக இருக்கிறது. மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் நடத்துவது குறித்து ஆலோசனை நடைபெற்றதாக கூறப்படும் தகவல் பொய்யானவை என தெரிவித்துள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

விடுதலைப் புலிகளால் சோனியா உயிருக்கு ஆபத்து – டி ஆர் பாலு கருத்து !