Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தம்பி சுதீஷ் கையில் அதிகாரம்: பட்டும் திருந்தாத பிரேமலதா!

Advertiesment
தம்பி சுதீஷ் கையில் அதிகாரம்: பட்டும் திருந்தாத பிரேமலதா!
, வெள்ளி, 15 நவம்பர் 2019 (13:58 IST)
உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைத்ததுள்ளதாக அதிமுக கூட்டணி கட்சியான தேமுதிக. 
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக  அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக   விருப்ப மனு விநியோகம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக விருப்பமனு விநியோகத்தை துவங்கியுள்ளது. 
 
இதனை தொடர்ந்து தேமுதிகவும் உள்ளாட்சி தேர்தல் விருப்பமனு விநியோகத்தை துவங்கியது. தேமுதிக தலைவர் விஜய்காந்த் விருப்பமனுக்களை வழங்கினார். மேலும், உள்ளாட்சி தேர்தலில் தொகுதி பங்கீடு பற்றி பேச எல்.கே.சுதீஷ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தேமுதிக தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
webdunia
எல்.கே.சுதீஷ் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள குழுவில் இளங்கோவன், மோகன்ராஜ், பார்த்தசாரதி, ஏ,எஸ்.அக்பர் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். ஆனால், இந்த குழுவுக்கு சுதீஷை தலைமையாக போட்டது கட்சிக்குள் உள்ள சில முக்கிய நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். 
 
கடந்த மக்களவை தேர்தலின் போது அதிமுக, திமுக என இரு கட்சிகளிடமும் ஒரே சமயத்தில் கூட்டணி குறித்தும் தொகுதி பங்கீடு குறித்தும் பேசி சர்ச்சையை ஏற்படுத்தினார் சுதீஷ். அதன் பின்னர் அதிமுகவிடம் கேட்டது கிடைக்காமல் கொடுத்தை வைத்து கூட்டணி அமைத்தது தேமுதிக. 
 
எனவே இந்த முறையும் அவர் பொறுப்பாக செயல்படுவாரா என்பதற்கு உத்திரவாதம் இல்லாமல் அவரது தலைமையில் தொகுதி பங்கீடு வேலைகளை விட்டிருப்பது அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாக தெரிகிறது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

திமுக கோடீஸ்வரர்களின் கட்சி – அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல் !