Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

கலெக்‌ஷன் படு ஜோரு... கோடிகளில் புரண்டு உருலும் திமுக: வம்பிழுக்கும் ஜெயகுமார்!

Advertiesment
கலெக்‌ஷன் படு ஜோரு... கோடிகளில் புரண்டு உருலும் திமுக: வம்பிழுக்கும் ஜெயகுமார்!
, வெள்ளி, 15 நவம்பர் 2019 (12:06 IST)
அதிமுக ஏழைகளின் கட்சி எனவும் திமுக கோடீஸ்வர கட்சி எனவும் அமைச்சர் ஜெயக்குமார் பேசி இருப்பது சர்ச்சைகளை ஏற்படும் வகையில் உள்ளது. 
 
தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாத நிலையில் வரும் டிசம்பர் மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்காக  அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றனர். அந்த வகையில் திமுக   விருப்ப மனு விநியோகம் நேற்று நடைபெற்ற நிலையில் இன்று அதிமுக விருப்பமனு விநியோகத்தை துவங்கியுள்ளது. 
 
மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.25,000, நகராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.10,000, வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, பேரூராட்சி தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, நகர்மன்ற உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.2,500, பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.500 என அதிமுக நிர்ணயித்துள்ளது. 
webdunia
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக அமைச்சர் ஜெயகுமார், அதிமுக ஏழைகளின் கட்சி எனவும் திமுக கோடீஸ்வர கட்சி என பேசியுள்ளார். ஆம், திமுக மேயர் பதவிக்கான விருப்ப மனு கட்டணத்தை ரூ.50,000 ஆக நிர்ணயித்து இருப்பதை குறிப்பிட்டு அவர் இவ்வாறு பேசியுள்ளார். 
 
மேயர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.50,000, மாநகராட்சி மன்ற உறுப்பினர், பேரூராட்சித் தலைவர், மாவட்ட ஊராட்சித் தலைவர் ஆகிய  பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.10,000, நகராட்சித் தலைவர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.25,000, நகராட்சி உறுப்பினர், ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.5,000, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கான விருப்பமனு கட்டணம் ரூ.2,500 என திமுக நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தண்ணீர் கடவுள் நிஜம்தானா? பூமிக்கு அடியில் கிடந்த 21 கோபுரங்கள்!!