சென்னையில் நேற்று எதிர்பாராத பெய்த மழை காரணமாக பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு இருந்த நிலையில் இந்த மழையால் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
 			
 
 			
					
			        							
								
																	
	 
	சென்னை மயிலாப்பூரில் உள்ள சிவசாமி சாலையில் தேங்கிய மழைநீரில் இருசக்கர வாகனத்தில் வந்த பாலசுப்பிரமணியம் என்பவர் கீழே விழுந்து பலியானார் 
	 
	இருசக்கர வாகனம் அவரது மேல் விழுந்தது என்றும், அதனால் அவரால் எழுந்திருக்க முடியவில்லை என்றும் தேங்கியிருந்த மழை நீரில் மூச்சு திணறி அவர் உயிரிழந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன 
	 
	மழைநீரில் தவறி விழுந்து உயிரிழந்த சுப்பிரமணியம் அவர்களுக்கு வயது 50 என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று பெய்த மழையில் ஒருவர் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.