Publish Date: Fri, 31 Dec 2021 (07:35 IST)
Updated Date: Fri, 31 Dec 2021 (07:41 IST)
சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் நேற்று திடீரென பெய்த கனமழை காரணமாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் வரத்து அதிகரித்தது.
சென்னை மற்றும் செங்கல்பட்டு காஞ்சிபுரம் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் நேற்று மழை வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக செம்பரபாக்கம் ஏரி நிறைந்து தற்போது 2,000 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்
நேற்று இரவு வரை செம்பரம்பாக்கத்தில் பெய்த மழையின் அளவு 17 சென்டிமீட்டர் ஆக பதிவு செய்துள்ளது என்றும் செம்பரபாக்கம் ஏரிக்கு வரும் 2 ஆயிரம் கனஅடி தண்ணீரை அப்படியே வெளியேற்றப்பட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனால் சென்னையின் பல பகுதிகளில் செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வெளியேற்றப்படும் நீர் வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது