Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

எடுபடாமல் போன ஓபிஎஸ் பேச்சு... வேட்பாளர் அறிவிப்பில் அவமானம்...?

எடுபடாமல் போன ஓபிஎஸ் பேச்சு... வேட்பாளர் அறிவிப்பில் அவமானம்...?
, புதன், 24 ஏப்ரல் 2019 (09:01 IST)
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளின் அதிமுக வேட்பாளர் பட்டியல் நேற்று வெளியானது. இதனால் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் அதிருப்தியில் உள்ளதாக தெரிகிறது. 

 
திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டப்பிடாரம் மற்றும் சூலூர் ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளில் வரும் மே 19 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் திமுக மற்றும் அமமுக வேட்பாளர் பட்டியலை வெளியிட்டது. இதனைதொடர்ந்து சற்று தாமதமாகவே அதிமுக 4 தொகுதிக்கான வேட்பாளர்களை அறிவித்தது. வேட்பாளர் பட்டியல் பின்வருமாறு,  
 
1. அவரக்குறிச்சி - செந்தில்நாதன்
2. திருப்பரங்குன்றம் - முனியாண்டி
3. சூலூர் - வி.பி.கந்தசாமி
4. ஒட்டப்பிடாரம் (தனி தொகுதி) - பெ.மோகன் 
webdunia
இந்நிலையில், திருப்பரங்குன்றம் தொகுதி வேட்பாளராக முத்துராமலிங்கத்தை பரிந்துரை செய்தார் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓபிஎஸ். ஆனால், இதற்கு முட்டுகட்டை போட்டுள்ளனர் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி.உதயகுமார் மற்றும் விவி.ராஜன் செல்லாப்பா. 
 
ஒரு கட்டத்தில் பேச்சுவார்த்தை பின்னர் ஆர்.பி.உதயகுமார் அரை மனதாக சம்மதித்தார். ஆனால், மேலும் இருவர் சம்மதிக்காத நிலையில் ஓபிஎஸ் பேச்சு எடுபடாமல் போனது. அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமாக இருந்தும் அவரது பரிந்துரையை தலைமை வரை பரிசீலனை கூட செய்யாதது ஓபிஎஸ் ஆதரவாளர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக செய்திகள் கசிகின்றன. 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

இலங்கை குண்டு வெடிப்பு - பாதுகாப்பு துறையில் அதிரடி மாற்றங்கள் !