Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

2026, 2031, 2036ஆம் ஆண்டிலும் திமுக ஆட்சி தான்; முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கை..!

Advertiesment
Stalin

Mahendran

, வியாழன், 26 ஜூன் 2025 (14:00 IST)
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், 2026 ஆம் ஆண்டு மட்டுமல்லாமல், 2031 மற்றும் 2036 ஆம் ஆண்டுகளிலும் திமுக ஆட்சிதான் தொடரும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
 
திருப்பத்தூர் மாவட்டத்தில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்ட முதல்வர் ஸ்டாலின், தமிழக வரலாற்றில் இல்லாத வகையில் திட்டங்களை செயல்படுத்தி வருவதாக பேசினார். "மக்களுக்காக நன்மை செய்து கொண்டே இருப்போம்; மக்களும் அன்பை வாரி வழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். மற்ற மாநிலங்களை விட இந்தியாவில் தமிழகம் தான் அதிக பொருளாதார வளர்ச்சி அடைந்துள்ளது. நாட்டின் வளர்ச்சியில் 10% நாம் இருக்கிறோம். சமூக முன்னேற்றம், உயர்கல்வி ஆகியவற்றில் முதல் இடத்தில் இருக்கிறோம்," என்று அவர் பெருமிதத்துடன் கூறினார்.
 
"மக்களின் வரவேற்பைப் பார்க்கும்போது 2026 மட்டுமல்ல, 2031, 2036 ஆம் ஆண்டுகளிலும் திமுக ஆட்சியாகத்தான் இருக்க போகிறது. கடந்த ஆட்சியாளர்களால் சீரழிந்த தமிழகத்தின் வளர்ச்சியை திமுக 4 ஆண்டுகளில் மீட்டு எடுத்துள்ளது," என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அவரது இந்த உரை, திமுக தொண்டர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
Edited by Mahendran

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

டைம் வேஸ்ட்.. மகாராஷ்டிரா தேர்தல் மோசடி குறித்த மனுவுக்கு நீதிபதிகள் கருத்து.. மனு தள்ளுபடி..!