தமிழ்நாடு அரசு அனுமதி இன்றி இனி யாரும் சிலை வைக்கக்கூடாது என்றும் அனுமதியின்றி சிலை வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒவ்வொரு தெருவுக்கும் ஒரு சிலை என்ற நிலை ஏற்பட்டுள்ள நிலையில் சிலைகளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாக வெளிவந்த செய்தியைப் பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தமிழ்நாடு அரசின் அனுமதியின்றி யாரும் சிலைகள் வைக்க கூடாது என்று மீறி சிலைகள் வைத்தால் உடனடியாக அந்த சிலைகளை அகற்ற வேண்டும் என்று மதுரை உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது
மேலும் அனுமதியின்றி சிலை வைப்பதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படுவதாகவும் அதுமட்டுமின்றி போலீசார் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர் என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்
எனவே இனி தமிழக அரசின் அனுமதி இன்றி யாரும் சிலை வைக்க முடியாது என்பது இந்த உத்தரவின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.