திருவண்ணாமலை கார்த்திகை தீப தினத்தன்று மலை ஏறுவதற்கு 2500 பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதத்தில் வரும் பெரிய கார்த்திகை திருநாள் அன்று திருவண்ணாமலையில் கார்த்திகை தீபம் ஏற்றப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் இந்த ஆண்டு கார்த்திகை தினத்தன்று மலை ஏறுவதற்கு 2500 பக்தர்களுக்கு மட்டும் அனுமதி வழங்கப்படும் என்றும் மலை மீது ஏற கூடிய இருபத்தி மூன்று வழிகளில் வனத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன
மேலும் கார்த்திகை தீப முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பக்தர்களின் வசதிக்காக தற்காலிக பஸ் நிலையம் 13 இடங்களில் அமைக்கப்பட்டிருப்பதாகவும் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட திட்டமிட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது
மேலும் சிறப்பு பேருந்துகள் மற்றும் கிரிவலப்பாதையில் கண்காணிப்பு கேமராக்கள் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.