கள்ளக்குறிச்சியில் உள்ள கனியாமூர் என்ற தனியார் பள்ளி கடந்த சில மாதங்களாக மூடப்பட்டு இருக்கும் நிலையில் தற்போது அந்த பள்ளியை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன
கள்ளக்குறிச்சியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படித்த மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டதை அடுத்து பெரும் பிரச்சனை ஏற்பட்டது என்பதும் இதனை அடுத்து அந்த பள்ளி சில மாதங்களாக மூடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது
மாணவி உயிரிழப்பை தொடர்ந்து அந்த தனியார் பள்ளி பொதுமக்களால் சூறையாடப்பட்டது என்பதும் கடந்த சில மாதங்களாக வாரங்களாக அந்த பள்ளியின் மராமத்து பணிகள் நடந்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கள்ளக்குறிச்சி கனியாமூர் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்க பள்ளி நிர்வாகத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. கடந்த சில மாதங்களாக ஆன்லைன் மூலம் மட்டுமே வகுப்புகள் நடந்து வந்த நிலையில் தற்போது அந்த பள்ளி திறக்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது