Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கிற்கு வாய்ப்பில்லை -அதிகாரிகள் தகவல்

Advertiesment
தமிழகத்தில் இரவு   நேர ஊரடங்கிற்கு  வாய்ப்பில்லை -அதிகாரிகள் தகவல்
, வெள்ளி, 24 டிசம்பர் 2021 (15:39 IST)
தமிழகத்தில் இரவு   நேர ஊரடங்கிற்கு  வாய்ப்பில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

உலகம் முழுவதும் திரிபடைந்த கொரோனா வைரஸான் ஒமிக்ரானின் பரவல் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது. இந்த வைரஸ் வேகமாக பரவக் கூடியது என்பதால் உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை பின்பற்ற தொடங்கியுள்ளன. அதேசமயம் ஆய்வாளர்கள் பலர் ஒமிக்ரான் வேகமாக பரவக்கூடியது என்றாலும் அதிகமான பாதிப்பை ஏற்படுத்தாது எனக் கூறி வருகின்றனர்.

இந்தியாவில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக பதிவானது. தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் ஒமிக்ரான் பாதிப்பு 358 ஆக உயர்ந்துள்ளது. அதேசமயம் இதில் குணமானவர்கள் எண்ணிக்கை 114 ஆக உள்ளது. தமிழகத்தில் 34 பேருக்கு ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஓமிக்ரான் பரவல் அதிகரித்து வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த ஆலோசனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன், மக்கள் நல்வாழ்வுத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்றுள்ளனர்.

ஒமிக்ரான் பரவலை கட்டுப்படுத்த மாவட்டங்களில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. இதில் முதல்வருடனான ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்ட அதிகாரிகள் , தமிழகத்தில் இரவு   நேர ஊரடங்கிற்கு  வாய்ப்பில்லை எனத் தகவல் தெரிவித்துள்ளனர்.

மேலும் ஒமைக்ரான் 10%  நெருங்கும் பட்சத்தில் ஊரங்கு அறிவிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளனர்
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தில் கடும் குளிர்! – வானிலை ஆய்வு மையம்!