Publish Date: Thu, 23 Dec 2021 (15:33 IST)
Updated Date: Thu, 23 Dec 2021 (18:09 IST)
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, சவரன் ரூ.36,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் இன்று தங்கம் மற்றும் வெள்ளி விலை சென்னையில் உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றைய விலை குறித்த தகவலைப் பார்ப்போம்.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.192 உயர்ந்து, சவரன் ரூ.36,416-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் ரூ.24 உயர்ந்து, ரூ.4,552-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் சென்னையில் சில்லறை வர்க்கத்தில் வௌ்ளியின் விலை ரூ.66.20-க்கு விற்பனை செய்யப்படுகிறது.