Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

என்னால் விலகி இருக்க முடியவில்லை தலைவா…. எம் ஜி ஆர் புகைப்படத்தோடு போஸ்டர் ஒட்டிய அன்வர் ராஜா

Advertiesment
என்னால் விலகி இருக்க முடியவில்லை தலைவா…. எம் ஜி ஆர் புகைப்படத்தோடு போஸ்டர் ஒட்டிய அன்வர் ராஜா
, வியாழன், 23 டிசம்பர் 2021 (15:50 IST)
சமீபத்தில் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனம் ஈர்த்துள்ளது.

செவ்வாய்க் கிழமை இரவு பத்தே முக்கால் அளவில் அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளர் முன்னாள் முதல்வருமான ஓ. பன்னீர்செல்வமும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிச்சாமியும் இணைந்து வெளியிட்ட அறிக்கையின்படி, அ. அன்வர்ராஜா சிறுபான்மையினர் நலப் பிரிவின் செயலர் பதவியிலிருந்தும் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது அதிமுகவில் சலசலப்பை ஏற்படுத்தியது. இவர் சசிகலாவுக்கு ஆதரவாக கருத்துகளை பேசி வந்ததாலேயே நீக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இப்போது அன்வர் ராஜா ஒட்டியுள்ள போஸ்டர் இணையத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது. அந்த போஸ்டரில் ‘தலைவா... கட்சியில் இருந்து என்னால் விலகியிருக்க முடியவில்லை. ஏனெனில் நான் தினமும் உன்னை நினைக்கிறேன். அதில் நான் என்னை மறக்கிறேன் -தங்கள் நினைவில் வாழும் அ. அன்வர் ராஜா’ என எழுதப்பட்டுள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

காயமடைந்த மாணவர்களை காப்பாற்ற முன்வராத ஆசிரியர்கள் - அமைச்சர் வேதனை!