பேராசிரியை நிர்மலா தேவியின் விருதுநகர் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீசார் நடத்திய சோதனையில் ரகசிய டைரி ஒன்று சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ள நிலையில் 3 வது நாளாக சிபிசிஐடி போலீஸார் அவரிடம் விசாரனை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் நிர்மலா தேவியின் வீட்டில் சி.பி.சி.ஐ.டி. போலீஸார் 6 மணி நேரம் நடத்திய சோதனையில் கம்ப்யூட்டர், பென்டிரைவ் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்கள் கைபற்றப்பட்டுள்ளது. மேலும் அவரது காரில் ரகசிய டைரி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது.
அதில் நிர்மலாதேவியின் தொடர்பில் இருந்த அதிகாரிகள் பெயர் இருப்பதாகவும் கூறப்படுகிறது. சோதனைக்கு பின்னர் நிர்மலா தேவியின் வீட்டுக்கு சீல் வைக்கப்பட்டது.