Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

நிர்மலா தேவி வாக்குமூலம் - 2 பேராசிரியர்கள் தலைமறைவு

நிர்மலா தேவி வாக்குமூலம் - 2 பேராசிரியர்கள் தலைமறைவு
, சனி, 21 ஏப்ரல் 2018 (11:09 IST)
விசாரணையின் போது போலீசாரிடம் நிர்மலா தேவி கூறிய இரண்டு பேராசிரியர்கள் தலைமறைவாகி விட்டனர்.

 
மதுரை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் ஒரு தனியார் கல்லூரியில் பயிலும் 4 மாணவிகளிடம் தவறாக பேசிய பேராசிரியை நிர்மலா தேவியின் ஆடியோ சமீபத்தில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. தற்போது நிர்மலா தேவி கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீது 3 பிரிவுகளின் கீழ்  வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கு தற்போது சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டுள்ளது.  
 
சிபிசிஐடி போலீசார் நேற்று முன் தினம் தங்கள் விசாரணையை துவங்கியுள்ளனர். அதேபோல், ஆளுநரால், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் தலைமையில் அமைக்கப்பட்ட குழுவும் நேற்று விசாரணையை துவங்கியது.
 
நிர்மலா தேவியிடம் சிபிசிஐடி போலீசார் நேற்று முதல்கட்ட விசாரணையை துவக்கினர். அப்போது, மதுரை காமராஜர் பல்கலைகழக துணை பேராசிரியர் முருகன் மற்றும் முன்னாள் மாணவர் கருப்பசாமி ஆகியோரின் பெயர்களை கூறியிருந்தார். எனவே, அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளை சிபிசிஐடி போலீசார் இன்று காலை அவர்களின் வீட்டிற்கு சென்றனர். ஆனால், இது தெரிந்த அவர்கள் ஏற்கனவே தலைமறைவாகி விட்டனர்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

எஸ்.வி.சேகர் மீது நடவடிக்கை - தமிழிசை சவுந்தரராஜன் பேட்டி