Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

மணிப்பூர் பெண்களுக்கு நடந்த கொடுமைகளை கண்டு என் இதயம் நொறுங்குகிறது - முதல்வர் மு.க.ஸ்டாலின்

Advertiesment
MK Stalin
, வியாழன், 20 ஜூலை 2023 (14:23 IST)
மணிப்பூர் மாநிலத்தில் நடைபெற்ற வன்முறை சம்பவத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
 

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால்  வன்முறை செய்த  வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாகி ஆகி வருகிறது.

நாட்டையே அதிர்ச்சியடைய செய்த இந்த சம்பவம் தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் தாமாக முன்வந்து விசாரணை மேற்கொண்டுள்ளது. அதேபோல், மணிப்பூர் சம்பவத்திற்கு உரிய நடவடிக்கை எடுக்க  டிஜிபிக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மணிப்பூர் விவகாரத்தால்  நாடாளுமன்ற இரு அவைகளிலும் கடும் அமளி ஏற்பட்டதால் நாள் முழுவதும் மக்களவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் டுவிட்டர் பக்கத்தில்,’’ மணிப்பூர் பெண்களுக்கு எதிராக நடந்த கொடுமைகளை கண்டு என் இதயம் நொறுங்குகிறது. வெறுப்பும் விஷமும் மனித குல ஆன்மாவை வேருடன் பிடுங்கும்… இந்தக் கொடுமைகளுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க    வேண்டும். மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்ப மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்று  தன் டவீட் பதிவிட்டுள்ளார். 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

கே.கே.எஸ்.எஸ்.ஆர். மீதான சொத்து குவிப்பு வழக்கு: ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் முக்கிய உத்தரவு..!