அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி உள்ளிட்டோர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது.
கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சில ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பை அளித்துள்ளது
இந்த வழக்கில் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் மற்றும் அவரது மனைவி விடுவிக்கப்படுகிறார் என்று அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பை திமுகவினர் கொண்டாடி வருகின்றனர்