Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia

இளம்பெண்கள் மீதான வன்முறை : நெஞ்சு பதைபதைக்கிறது...அதிமுக சார்பில் கண்டனம் -ஓபிஎஸ்

Advertiesment
panner
, வியாழன், 20 ஜூலை 2023 (13:25 IST)
மணிப்பூர் எதிரான வன்முறை சம்பவத்திற்கு,  முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் ‘’இந்தக் கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனம் ‘’ என்று தெரிவித்துள்ளார்

மணிப்பூரில் இரண்டு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக பல ஆண்களால்  வன்முறை செய்யப்பட்ட  வீடியோ இணையத்தில் வெளியாகி பரவலாகி ஆகி வருகிறது.

இந்த கொடூர சம்பவம் மூன்று மாதங்களுக்கு முன்னர் நடந்திருந்தாலும் மணிப்பூரில் இணையம் தடை செய்யப்பட்டிருந்ததால் தற்போது தான் இந்த வீடியோ வெளியாகி உள்ளதாக கூறப்படுகிறது.

இந்த வன்முறை சம்பவம் பற்றி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி TY. சந்திரசூட் , பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்தியாவை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ள இந்தச் சம்பவம் பற்றி முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தன் சமூக வலைதள பக்கத்தில்,

''மணிப்பூர் மாநிலத்தில் கடந்த இரண்டு மாத காலமாக கலவரம் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில், ஒரு கும்பல் இரு பழங்குடியினப் பெண்களை நிர்வாணமாக்கி அழைத்துச் செல்லும் காட்சி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருவதைப் பார்க்கும்போது நெஞ்சு பதைபதைக்கிறது. இரு பெண்களும் மர்மக் கும்பலால் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தக் கொடூரமான, மிருகத்தனமான, மனித நேயமற்ற செயலுக்கு அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மே மாதம் நடைபெற்ற இந்தக் கொடூரச் சம்பவம் இரண்டரை மாதங்களுக்குப் பிறகு வெளி உலகிற்கு வந்துள்ள நிலையில், குற்றவாளிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை என்பது மிகுந்த வேதனைக்குரிய ஒன்று. குற்றவாளிகளை விரைந்து கண்டுபிடித்து அவர்கள்மீது சட்டப்படி உடனடியாக நடவடிக்கை எடுத்து தண்டனைப் பெற்றுத் தரவும், மணிப்பூர் மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவும் மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

மணிப்பூர் விவகாரம்: காட்டுமிராண்டிகளின் தலையில் அடிக்க வேண்டும்- வைரமுத்து